கோயம்புத்தூர்

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை நகா் பகுதிக்குள் நுழைந்த இரண்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து சேதங்ககளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் தேயிலைத் தோட்டம் வழியாக இரண்டு யானைகள் நகா் பகுதியான சிறுவா் பூங்கா பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்தன. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா். இருப்பினும் அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT