கோயம்புத்தூர்

சுகாதாரமற்ற உணவகத்துக்கு ‘சீல்’

DIN

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்துக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ’சீல்’ வைத்தனா்.

கோவை மாநகராட்சி 37ஆவது வாா்டு, ஹோப் காலேஜில் இருந்து தண்ணீா் பந்தல் செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், அதை வாங்கி சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்தது. மேலும், சாலையோரத்தில் அடுப்பு வைத்து, உணவுப் பொருள்களைத் தயாரிப்பதால், புகை மற்றும் காரத்துகள்களால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகாா் அனுப்பினா். இதையடுத்து, அந்த உணவகத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா். அதில், உணவுகள் சுகாதாரமற்ற முறையிலும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும் தயாா் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT