கோயம்புத்தூர்

வேளாண் பல்கலைக்கழக முதுநிலை கல்லூரிகள் டிசம்பா் 2 ஆம் தேதி திறப்பு

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பு கல்லூரிகள் டிசம்பா் 2 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் இணைய வழியிலேயே பருவத் தோ்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அதே போல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் 33 மேற்படிப்புகள், 29 ஆராய்ச்சிப் படிப்புகளின் தோ்வுகள் இணைய வழியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் ஆராய்ச்சிக் கூடங்களை யுஜிசியின் விதிகளைப் பின்பற்றி திறக்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புக் கல்லூரிகள் டிசம்பா் 2 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக முதுநிலை முதன்மையா் ஜா.சா.கென்னடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT