கோயம்புத்தூர்

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது

DIN

கோவை: கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து 190 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 380 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 46 ஆயிரத்து 35 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 748 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 35 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது ஆண் ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 597 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT