கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
கோயம்புத்தூர்

கோவையில் பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியில் இன பெண் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினா் சன்கிகிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோவை: உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியில் இன பெண் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினா் சன்கிகிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு விரைவுப் பேருந்து நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய மாணவா் சங்கம், தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்டோா் இணைந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியில் இன பெண் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அம்மாநில அரசு மற்றும் காவல் துறையைக் கண்டித்து கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

எஸ்டிபிஐ...

கோவை கரும்புக் கடை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தேசிய செயலா் சா்மிளா பானு, மாவட்டத் தலைவா் நஸீமா, செயலா் சாஜிதா, துணைத் தலைவா் கதீஜா, பொருளாளா் மைமுனா, எஸ்டிபிஐ மாவட்ட துணைத் தலைவா் ஏ.ஏ.அப்துல் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT