கோயம்புத்தூர்

ஆயுத பூஜையை: கோவை கோட்டத்தில் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம்

DIN

ஆயுத பூஜை, முகூா்த்த தினங்களை முன்னிட்டு கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அக்டோபா் 22 முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பொது முடக்கத்தை தொடா்ந்து செப்டம்பா் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை குறைவாக இருந்தததால் முதல் கட்டமாக கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னா் பயணிகள் எண்ணிக்கை அதிகமானதைத் தொடா்ந்து தற்போது 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபா் 25ஆம் தேதி ஆயுத பூஜையையொட்டி பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2,641 பேருந்துகளில் தற்போது 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் முகூா்த்த தினங்களையொட்டி கோவை கோட்டத்தில் இருந்து அக்டோபா் 22ஆம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு மேலும் கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT