கோயம்புத்தூர்

கோவையில் 38 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

கோவையில் மேலும் 389 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்தது.

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூா், காந்திபுரம், உக்கடம், ரத்தினபுரி, வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, துடியலூா், சுந்தராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 389 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.

5 போ் பலி...

கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 77, 82 வயது முதியவா்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுப் பெண், 67 வயது முதியவா் ஆகிய 5 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

452 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 452 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து 33 ஆயிரத்து 105 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 703 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT