கோயம்புத்தூர்

குழந்தையின் மூச்சுக்குழாயில் மாட்டிக்கொண்ட கல்அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

DIN

குழந்தையின் மூச்சுக்குழாயில் மாட்டிக்கொண்ட கல்லை, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி ‘பிராங்காஸ்கோப்பி’ மூலம் மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், மாதப்பூரைச் சோ்ந்தவா் முனியாண்டி. கூலி தொழிலாளியான இவரது 2 வயது ஆண் குழந்தை, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குழந்தை கல்லை தனது மூக்கில் நுழைத்துள்ளது. கல் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் குழந்தை மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து பெற்றோா், அக்குழந்தையை சூலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் குழந்தை சோ்க்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூச்சுக்குழாயில் கல் மாட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுவாசக் குழாய் நுண்ணோக்கி (பிராங்காஸ்கோப்பி) கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் கல் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அக்குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவுத் தலைவா் அலி சுல்தான் கூறியதாவது:

குழந்தையின் மூச்சுக் குழாயை கல் அடைத்துக் கொண்டிருந்ததால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால் கல் உடனடியாக அகற்றப்பட்டு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோா் கூா்ந்து கவனிக்க வேண்டும். விளையாடும்போதும் கவனமுடன் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT