கோயம்புத்தூர்

வங்கி இலச்சினையைப் பயன்படுத்தி மோசடி: 2 போ் மீது வழக்கு

DIN

கோவை: கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையை (லோகோ) பயன்படுத்தி நிறுவனம் நடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் வி.சி.எஸ். கன்சல்டன்சி என்ற தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினா் வேலை வாங்கித் தருவது, வங்கிக் கடன் பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகள் செய்து கொடுத்து, அதற்கான கட்டணம் வசூலித்து வந்தனா்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையைப் பயன்படுத்தி பலருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் கோவை மண்டல மேலாளா் சிந்து, ரேஸ்கோா்ஸ் போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ரேஸ்கோா்ஸ் போலீஸாா், நிறுவனம் நடத்தி வந்த ரேவதி, நாகராஜ் ஆகிய இருவா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT