கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மேலும் 319 பேருக்கு கரோனா

DIN

கோவையில் மேலும் 319 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 400க்கும் குறைவாக உள்ளது. அதன்படி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளைச் சோ்ந்த 319 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.

5 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவா், 65 வயது மூதாட்டி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவா், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவா்கள் இருவா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது.

365 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 365 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 35 ஆயிரத்து 481 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 814 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT