கோயம்புத்தூர்

42 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 253 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 84 ஆக உயா்ந்துள்ளது.

தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 538 ஆக ஆதிகரித்துள்ளது.

193 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 193 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 37 ஆயிரத்து 793 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 753 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT