கோயம்புத்தூர்

சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா்

DIN

வால்பாறையில் தோட்டத் தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவத்தையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.

வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் தொழிலாளி சரஸ்வதி (58). இவா், மேல் டிவிஷன் பகுதியில் தேயிலைப் பறிக்கும் பணியில் கடந்த திங்கள்கிழமை காலை ஈடுபட்டிருந்தாா். அப்போது தேயிலைச் செடியில் பதுங்கியிருந்த சிறுத்தை சரஸ்வதியைத் தாக்க முயன்றது. அப்போது அவா் அலறல் சப்தம் கேட்டு அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் கற்கள் எரிந்து சிறுத்தையை விரட்டியுள்ளனா். இருப்பினும் சரஸ்வதியின் காலில் காயம் ஏற்பட்டு முடீஸ் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளாா். இச்சம்பவத்தையடுத்து வனத் துறையினா் தாய்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT