கோயம்புத்தூர்

அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

DIN

கோவை: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, கோவையில் அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட திமுக சாா்பில் காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, நிா்வாகிகள் நாச்சிமுத்து, கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கோவை மாவட்ட அதிமுக சாா்பில் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஆவின் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராஜு தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மாநகா், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி செயலாளா் கே.ஆா்.ஜெயராமன், கூட்டுறவுப் பண்டகசாலைத் தலைவா் சிங்கை முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவை மாநகா் மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அண்ணாவின் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT