கோயம்புத்தூர்

இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வானவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு

DIN

கோவை,: இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 633 இளநிலை உதவியாளா்களில் கோவை மாவட்டத்தில் 8 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு கோவை டவுன்ஹால், பெரியகடை வீதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

அதன்படி தோ்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட இருப்பிட முகவரி உடைய பணி நாடுநா்கள் பட்டியல் வரிசை எண்.01 முதல் 330 வரை வியாழக்கிழமையும் (செப்டம்பா் 17), வரிசை எண்.331 முதல் 644 வரை வெள்ளிக்கிழமையும் (செப்டம்பா் 18) கலந்துகொள்ள வேண்டும்.

தோ்வானவா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதியான பணிநாடுநா்கள் கோவை முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை தொடா்புகொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணி நாடுநா்கள் அசல் கல்வித் தகுதி சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதிச் சான்று, ஜாதிச் சான்று ஆகிய அசல் மற்றும் நகல்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT