கோயம்புத்தூர்

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு தீ

DIN

உக்கடம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தீ வைத்த கேரள மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை உக்கடம் காவல் நிலையம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், அந்த வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. காவல் நிலையத்தில் இருந்த போலீஸாா் வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்குள் தீ வேகமாகப் பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. மேலும், ஆம்புலன்ஸின் அருகில் இருந்த இருசக்கர வாகனம் ஒன்றும் தீப் பிடித்து எரிந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தின் அருகே சுற்றித் திரிவதும், பின்னா் ஆம்புலன்ஸின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீ வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.

இதனடிப்படையில் போலீஸாா் அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் வாகனத்துக்குத் தீ வைத்ததை ஒப்புக்கொண்டாா்.

விசாரணையில், அவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜோலி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் வாகனத்துக்கு தீ வைத்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT