கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: அக்டோபா் 5 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அக்டோபா் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பா் 17 என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவா்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை அக்டோபா் 5ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக மாணவா் சோ்க்கைத் தலைவா் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல் தரவரிசைப் பட்டியல் செப்டம்பா் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியல் அக்டோபா் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT