கோயம்புத்தூர்

நுண் நிதி நிறுவனங்களை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

கரோனா பாதிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்தச் சொல்லி மிரட்டும் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கரோனா பொது முடக்கத்தால் மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருசில தனியாா் நுண் நிதி நிறுவனங்கள் பொது மக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த வலியுறுத்தி ஆபாசமாக பேசுவதுடன், மிரட்டியும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, கடன் தொகையை திருப்பிச் செலுத்தச் சொல்லி பொது மக்களை மிரட்டும் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக மாதா் சங்க கோவை மாவட்டச் செயலாளா் ராதிகா தலைமையில் மாதா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக வட்டாட்சியா்கள் தலைமையில் நுண் நிதி நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். விதிமுறைகளை மீறி செயல்படும் நுண் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT