கோயம்புத்தூர்

கோவையில் ஒரே நாளில் 656 பேருக்கு கரோனா

DIN

கோவை: கோவையில் ஒரே நாளில் 656 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொடா்ந்து மூன்றாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றும் 20 வயதுப் பெண் மருத்துவப் பணியாளா்கள் இருவா், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 56 வயதுப் பெண் மருத்துவப் பணியாளா், அரசு தொழில்நுட்பக் கல்லூரி அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 58 வயது ஆண், வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 34 வயதுப் பெண், பி.ஆா்.எஸ். காவலா் பயிற்சிப் பள்ளியைச் சோ்ந்த 26, 30 வயது ஆண் காவலா்கள், 27 வயதுப் பெண் காவலா், காந்திபுரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 53 வயது ஆண், சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் 37 வயது ஆண் காவலா் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT