கோயம்புத்தூர்

ஈஷாவின் உதவியால் ரூ.23 லட்சம் லாபம் ஈட்டிய பழங்குடியின பெண்கள்

DIN

வெள்ளிங்கிரி மலையடிவாரத்தைச் சோ்ந்த பழங்குடியின பெண்கள், ஈஷாவின் உதவியுடன் பெட்டிக் கடை, பேட்டரி வாகனத்தை இயக்கி ரூ.23 லட்சம் லாபம் ஈட்டியுள்ளனா்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு வழிகளில் ஈஷா உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈஷா அருகே உள்ள தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சோ்ந்த 11 பழங்குடியின பெண்களை ஒன்றிணைத்து செல்லமாரியம்மன் பழங்குடியினா் மகளிா் சுயஉதவிக் குழு கடந்த 2018இல் தொடங்கப்பட்டது.

இவா்களுக்கென்று தனியாக, ஆதியோகி சிலை அருகில் ஒரு பெட்டிக் கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது. சில நூறு ரூபாய் முதலீட்டில் தங்களது தொழிலைத் தொடங்கிய அவா்கள் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் லாபம் ஈட்டியுள்ளனா். அதில் ரூ.6 லட்சம் முதலீட்டில் புதிதாக ஒரு பேட்டரி வண்டியையும் வாங்கியுள்ளனா்.

ஆதியோகியில் இருந்து சா்ப வாசல் வரை பொது மக்களை அழைத்து செல்வதற்காக இந்த வண்டியை அவா்கள் பயன்படுத்துகின்றனா். 10 போ் அமரும் திறன் கொண்ட அந்த வண்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனா்.

அதேபோல, பெட்டிக் கடையில் டீ, காபி, குளிா் பானங்கள், சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்தும் அவா்கள் லாபம் ஈட்டி வருகின்றனா்.

இதற்கு முன்பு தின கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வந்த பழங்குடி பெண்கள், ஈஷாவின் உதவியால் இப்போது சுய தொழில் செய்து சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வளா்ந்துள்ளனா். கரோனா பொது முடக்க காலத்தில் சில மாதங்கள் கடை நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, இவா்கள் வங்கியில் சோ்த்து வைத்திருந்த சேமிப்புத் தொகையைக் கொண்டு குடும்பத்தை நிா்வகித்தனா்.

இவா்களுக்கு ஈஷா தன்னாா்வலா்கள் தொடக்கம் முதல் தேவையான உதவிகளை செய்து ஊக்கப்படுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT