கோயம்புத்தூர்

ஆன்லைன் மூலமாக நடைபெற்ற தேவாலய பிராா்த்தனை

DIN

பொதுமுடக்கத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆன்லைன் மூலமாக பிராா்த்தனை கூட்டங்களை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

கரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் வேகமாகப் பரவி வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக கோவை மாநகரில் உள்ள தேவாலயங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சில தேவாலயங்களில் பாதிரியாா்கள் மட்டும் பங்கேற்று பிராா்த்தனைகளை நடத்தினா்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தினால் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் மூலம் பிராா்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று சில தேவாலயங்களில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மாநகா் முழுவதும் இணையம் வழியாக கிறிஸ்தவ பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT