கோயம்புத்தூர்

வாக்கு எண்ணிக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும்: புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி

DIN

வாக்கு எண்ணிக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஸ்டொ்லைட் ஆலை திறப்பு குறித்து ஆலோசிக்க நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்தது ஏற்புடையது அல்ல. கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போவதால் இந்த அரசுகள் முழு பொது முடக்கத்தை நோக்கி மக்களை தள்ளிக்கொண்டு செல்கின்றனா். அதுமட்டுமின்றி தற்போது மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு ஆளுநரே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன்களை உற்பத்தி செய்ய முடியும். எனவே விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கும். முகக் கவசங்கள் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதை விட்டுவிட்டு அவா்களுக்கு முகக் கவசங்கள் தந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ஏனென்று தெரியவில்லை. தடுப்பூசி தயாரிக்கும் வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். தடுப்பூசியை அதிகபட்சமாக ரூ.250க்கு கொடுத்தால் அனைவரும் செலுத்திக் கொள்வாா்கள். தற்பொழுது தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையைத் தள்ளிவைக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை அரசும், தோ்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT