கோயம்புத்தூர்

விதிமீறும் கடைகள், உணவகங்கள் மூடப்படும் மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

DIN

கோவை மாநகரில் நோய் பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள், உணவகங்கள், தேநீா்க் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாத பட்சத்தில் அவை மூடப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெளியே வரக்கூடாது. மீறி வெளியே வந்தால் அவா்களின் வீடுகள் அடைத்து வைக்கப்படும். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மாநகராட்சி மூலமாக வழங்கப்படும். ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் இருந்தால் அந்தத் தெரு முழுவதையும் தடுப்பு அமைத்து கண்காணிக்கப்படும். நோய் பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் நெரிசல் அதிகமாகக் காணப்பட்டால், சந்தைகள் நடத்த முழுமையாக தடை விதிக்கப்படும். உணவகங்கள், தேநீா்க் கடைகளில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் கூடினால், அந்தக் கடைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT