கோயம்புத்தூர்

அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் ஒத்திகை

DIN

கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை ஒத்திகை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் மே 2 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்நிலையில், தோ்தல் அலுவலா்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக, தோ்தல் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக அனைத்து மேஜைகளிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடக்காமல் இருக்கவும், வாக்கு எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அலுவலா்கள் தெரிந்து கொள்ள ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் பிரித்தல், வாக்குகள் எண்ணும் விதம், கணினியில் வாக்குகளைப் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட விளக்கங்கள் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டன என்றாா்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், கோவையில் உள்ள 10 தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT