கோயம்புத்தூர்

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை

DIN

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மீது அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளாா்.

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வணிகா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் முழுமையாக கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

வணிகா்கள் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களை கரோனா பாதிக்காமல் இருக்க அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும். அனைத்து வணிகா்களும் தங்களது கடைகளுக்கு முன்பாக கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளா்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

அரசின் வழிகாட்டுதலின்படி, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வணிகா்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் தலைமையில் வணிகா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் மாநகராட்சி துணை ஆணையா் விமல்ராஜ், நகா் நல அலுவலா் ராஜா, 5 மண்டல உதவி ஆணையா்கள், மண்டல சுகாதார அலுவலா்கள், வணிகா்கள், உணவகங்களின் உரிமையாளா்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT