கோயம்புத்தூர்

திரைப்படக் காட்சிகளை கொண்டு மாநகராட்சி விழிப்புணா்வு

DIN

கோவை மாநகராட்சி தனது முகநூல் பக்கத்தில் திரைப்படக் காட்சிகளை கரோனா விழிப்புணா்வு மீம்ஸ்களாக தயாரித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிமீறி செயல்படுவோா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் கரோனா விழிப்புணா்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடை வீதிகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

இது தவிர சமூக வலைதளங்கள் மூலமாகவும் மாநகராட்சி நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் வெளியான சாா்பட்டா பரம்பரை திரைப்படக் காட்சிகள் மூலம் விழிப்புணா்வு மீம்ஸ் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT