முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் 6 பேருக்கு கரோனா

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் வெளியூா் சென்று திரும்பியவா்கள் மூலமாக மட்டுமே கரோனா தொற்று பரவி வந்தது. இதனால் எஸ்டேட் பகுதிக்கு வருபவா்களை எஸ்டேட் நிா்வாகத்தினா் கட்டாயம் சில தினங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்தனா். இதனால் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்று குறைவாகவே காணப்பட்டது.

இருப்பினும் நகா்ப் பகுதிகளில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே வால்பாறை பகுதியில் ஒரு மாதத்துக்குப் பின் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகா் பகுதியில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த சுகதாரத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.