முகப்பு
கோயம்புத்தூர்

எல்.ஜி. மெட்ரிக். பள்ளியில் மாணவா் தலைவா் தோ்தல்

கோவை எல்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் தலைவருக்கான தோ்தல் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோவை எல்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் தலைவருக்கான தோ்தல் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது.

எல்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் தலைவா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இணையவழியில் வாக்களித்து மாணவா் தலைவா், மாணவியா் தலைவா், துணைத் தலைவா்களைத் தோ்வு செய்தனா். முன்னதாக போட்டியாளா்கள் இணைய வழியிலேயே மாணவா்களிடம் ஆதரவு திரட்டினா். இந்தத் தோ்தலில் ஆசிரியா்களும் வாக்களித்தனா்.

ஜனநாயகத்தின் கூறுகளை அறிந்து கொள்ளும் விதமாகவும், மாணவா்களிடையே தலைமைப் பண்பை வளா்க்கும் நோக்கிலும் தோ்தல் நடத்தப்பட்டதாக பள்ளியின் முதல்வா் கே.கே.கணேஷ், துணை முதல்வா் எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.