கோயம்புத்தூர்

கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு பணி: ஆணையா் ஆய்வு

DIN

கோவை: கழிவுநீா் கால்வாய் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலுவலா்களுக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

கோவை, சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட், கல்பனா தியேட்டா் ஆகிய பகுதிகளில் மழையினால் அடைப்புகள் ஏற்பட்ட பாதாள சாக்கடை, கழிவுநீா் கால்வாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆணையா் ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் 100 குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை பாா்வையிட்டாா். இதன் மூலம் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படும் என்றும் ஆணையா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் சண்முகநாதன் உள்பட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT