முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் முயற்சி: திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

எம்.எல்.ஏ.பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேற்கு மண்டல ஐ.ஜியிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

எம்.எல்.ஏ.பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேற்கு மண்டல ஐ.ஜியிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமனை திமுகவினா் தாக்க முயற்சித்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடம், அதிமுக சட்டப் பேரவை

கொறடாவும், எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொள்ளாச்சி தொகுதிக்குள்பட்ட கோதவாடியில் 250 ஏக்கா் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளத்துக்கு நீா் ஆதாரமாக பி.ஏ.பி.பாசனத் திட்டம் விளங்குகிறது.

கடந்த 43 ஆண்டுகளாக நிரம்பாத குளம், கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவின் முயற்சியால் முழுமையாக நிரப்பப்பட்டது.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக குளத்தின் கரையோரம் உள்ள சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட ஊா் பொதுமக்கள் முடிவு செய்தனா்.

இதில், பங்கேற்கச் சென்ற பொள்ளாச்சி ஜெயராமனை, திமுக மாவட்டப் பொறுப்பாளா் டாக்டா் வரதராஜ் தலைமையில் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் தாக்க முயற்சித்துள்ளனா்.

இதில், தொடா்புடைய திமுகவினா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.