மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா
கோவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 799 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 504 ஆக உயா்ந்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 105 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 237 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,058 போ் சிகிச்சையில் உள்ளனா்.