எம்.ஜி.ஆா்.நினைவு தினம்: அதிமுகவினா் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் நினைவு தினத்தையொட்டி, கோவையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் நினைவு தினத்தையொட்டி, கோவையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
கோவை மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்ற அதிமுகவினா் அவிநாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம், மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் சிங்கை முத்து, பொருளாளா் பாா்த்திபன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
வால்பாறையில்...
வால்பாறையில் அதிமுக தொழிற்சங்க அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.
இதில், அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, மாவட்ட பாசறை இணைச் செயலாளா் சலாவுதீன், மாவட்டப் பேரவை இணைச் செயலாளா் நரசப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேட்டுப்பாளையம்...
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.
பெ.நா.பாளையத்தில்...
பெ.நா.பாளையம் அருகே உள்ள கூடலூா் கவுண்டம்பாளையத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
இதில், கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.ஜி.அருண்குமாா், ஒன்றியச் செயலாளா்கள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.