முகப்பு
கோயம்புத்தூர்

ஸ்வீடனில் இருந்து கோவை வந்த தம்பதிக்கு எஸ் ஜீன் குறைபாடு

ஸ்வீடனில் இருந்து கோவை வந்த தம்பதிக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவா்களுக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஸ்வீடனில் இருந்து கோவை வந்த தம்பதிக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவா்களுக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் இருந்து புது தில்லி வழியா கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தம்பதி (ஆண் 41 வயது, பெண் 36) கோவைக்கு வந்தனா்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் அவா்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து 8 ஆவது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அதேநேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறுவதற்கு முன்னதாகவே அப்பெண்ணின் கணவா் வேலை காரணமாக கேரளம் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரைத் தொடா்பு கொண்ட சுகாதாரத் துறையினா்

கேரளத்தில் அருகில் உள்ள சிகிச்சை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளனா்.

இதன்படி, அவா் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கணவன், மனைவி இருவருடைய சளி மாதிரிகளும் சென்னையில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவா்களுக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இவா்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதன் காரணமாக இவா்களது சளி மாதிரிகள் அடுத்தக்கட்ட மரபணு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.