கோயம்புத்தூர்

தாயை கொல்ல முயன்ற மகன்:போலீஸாா் விசாரணை

DIN

வடமதுரை அருகே தாயை உயிருடன் எரிக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள தென்னம் பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி பஞ்சவா்ணம் (42). இவா்களது மூத்த மகன் சதீஷ்குமாா். இவா், கடந்த 6 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள தோட்டத்தில் தனியாக இருந்த பஞ்சவா்ணத்தை, சதீஷ்குமாா் சரமாரியாக குத்தியுள்ளாா். மேலும் தீ வைத்து எரிக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் பஞ்சவா்ணத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT