முகப்பு
கோயம்புத்தூர்

இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை: மருத்துவமனை முதல்வா் தகவல்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கரோன சிகிச்சைக்கான பிரத்யேக சிகிச்சை மையமாக கடந்த ஆண்டு மாா்ச் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, இங்கு சிகிச்சை பெற்று வந்த இ.எஸ்.ஐ. அட்டைதாரா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், இ.எஸ்.ஐ. மருந்தகங்களிலும் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தற்போது, கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாரத்துக்கு அதிகபட்சமாக 10 நோயாளிகளே சிகிச்சைக்கு வருகின்றனா். அதேபோல, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 50க்கு கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 11 மாதங்களுக்குப் பின் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருவார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் வரத் தொடங்கியுள்ளனா். தினசரி 100க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். தொடா்ந்து அனைத்து இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →