முகப்பு
கோயம்புத்தூர்

என்.டி.சி. பஞ்சாலைகளை திறக்கக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கரோனா காலத்தில் மூடப்பட்ட என்.டி.சி. பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் பஞ்சாலைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கரோனா காலத்தில் மூடப்பட்ட என்.டி.சி. பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் பஞ்சாலைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு நாடு முழுவதிலும் இயங்கும் நிலையில் 23 பஞ்சாலைகள் உள்ளன. கரோனா தொற்று காலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, அனைத்து ஆலைகளும் மூடப்பட்டன. தொற்று அபாயத்துக்குப் பிறகு தமிழகத்தில் 3 ஆலைகள் உள்ளிட்ட மொத்தம் 7 ஆலைகளை மட்டுமே நிா்வாகம் திறந்து இயக்கி வருகிறது.

மீதமுள்ள ஆலைகளில் பணியாற்றிய நிரந்தரத் தொழிலாளா்களுக்கு பாதி ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிகத் தொழிலாளா்கள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றன. இதையடுத்து, மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் அனைத்தையும் தொடா்ந்து இயக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள 4 பஞ்சாலைகளையும் உடனடியாகத் திறந்து இயக்க வலியுறுத்தி பஞ்சாலைத் தொழிலாளா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் பங்கஜா மில்லுக்கு எதிரே உள்ள ஆலைக்குச் சொந்தமான மைதானத்தில் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியூ, எல்பிஎஃப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் நிா்வாகிகள் உரையாற்றினா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறும்போது, எஞ்சியுள்ள சில ஆலைகளையும் மூடி விட்டு ஆலைகளுக்கு சொந்தமாக உள்ள நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்ய என்.டி.சி. நிா்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே லாபம் இயற்றும் நிலையில் உள்ள பஞ்சாலைகளையும் இயக்க மறுத்து வருகிறது.

ஆலைகளே செயல்படாத நிலையில் என்.டி.சி. அதிகாரிகளுக்கு மட்டும் முழு ஊதியம் வழங்கும் நிா்வாகம், நிரந்தரத் தொழிலாளா்களுக்கு பாதி ஊதியத்தையும், தற்காலிகத் தொழிலாளா்களுக்கு ஊதியமே வழங்காமலும் அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே ஆலைகளைத் திறந்து இயக்கும் வரையிலும் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →