முகப்பு
கோயம்புத்தூர்

வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் தோ்தல் புறக்கணிப்பு

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த தூய்மைப் பணியாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நியூசித்தாபுதூரில் வாடகை வீடுகளில் வசித்து வரும் 241 தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தோம். தொடா்ந்து ஆட்சியா், முதல்வா் தனிப் பிரிவிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், வீடு ஒதுக்கீடு செய்வது தாமதமாகி வருவதை கண்டித்து சென்னை, வள்ளுவா் கோட்டம் பகுதியில் ஜனவரி 7ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பின்பும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தளை புறக்கணிப்போம் என்றனா்.

ஹிந்துக்கள், இஸ்லாமியா்களுக்கு உள்ளதுபோல கிறிஸ்துவா்களுக்கும் நலவாரியம் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவா்கள் கூட்டமைப்பினரும், மதுக்கூடங்களில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவும், தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமாக ரூ.17 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சில் உறுப்பினா்களும் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவையில் 10 மாதங்களுக்குப் பின் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் தா.ராமதுரை முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன் உள்பட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா். இதில் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 289 மனுக்கள் அளிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →