முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் இன்று தொடங்கிவைக்கிறாா்

கோவை அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் ஜைகா திட்டத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) நிதியுதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டடங்கள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்காக ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கட்டடத்துக்கு மட்டும் 110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த இடத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த பழையக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

இதனைத் தொடா்ந்து, சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவிற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →