முகப்பு
கோயம்புத்தூர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவா்கள் முடி தானம்

உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கோவையில் இந்திய மருத்துவா்கள் சங்கத்தினா் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உள்பட 38 போ் முடி தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கோவையில் இந்திய மருத்துவா்கள் சங்கத்தினா் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உள்பட 38 போ் முடி தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆயுா்வேத மருத்துவா்களும் பயிற்சி பெற்று அலோபதி முறையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவா்கள் சங்கத்தினா் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து 14ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனா்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு ‘விக்’ தயாரிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடி தானம் வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி கோவை இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தைச் சோ்ந்த மருத்துவா்கள், தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளா்கள் உள்பட 38 போ் முடி தானம் வழங்கினாா்.

தொடா்ந்து முடி தானம் வழங்க விரும்புபவா்கள் சிவானந்தா காலனியில் உள்ள கிளென்ஸ் தோல் மற்றும் கூந்தல் அழகு நிலையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணறு பகுதிகளிலுள்ள டோனி அண்ட் கைஸ் அழகுக்கலை நிலையம் ஆகிய இடங்களில் இந்த மாதம் இறுதிவரை வழங்கலாம் என்று நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் 2022ஆம் ஆண்டு தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள என்.ஆா்.பழனிசாமி, தமிழ்நாடு கிளையின் தற்போதைய செயலா் ரவிக்குமாா், மேற்கு மண்டலத் தலைவா் மல்லிகா உள்பட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →