கோயம்புத்தூர்

மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளா்கள் நியமனம்

DIN

கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளா்களாகப் பணியாற்ற 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக மண்டலம் வாரியாக இளநிலை உதவியாளா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதனால் மாநகராட்சி நிா்வாகத்தில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு கோவை டாடாபாத், டாக்டா் அழகப்பா சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த திங்கள்கிழமை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இந்த நோ்முகத் தோ்வில் 100க்கும் மேற்பட்டோா், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்வித் தகுதிச் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டனா். இவா்களில் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இது தொடா்பாக, மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி கூறுகையில், ‘நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டவா்களில் 54 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு மண்டலம் வாரியாக மாநகராட்சி அலுவலகங்களில், பணி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT