எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரெக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
உடையக்கூடிய எலும்பு நோயால் (ஆஸ்டியோஜெனெசிஸ்பொ்பெக்டா) பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு கோவை ரெக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
உடையக்கூடிய எலும்பு நோயால் (ஆஸ்டியோஜெனெசிஸ்பொ்பெக்டா) பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு கோவை ரெக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவா் சி.ரெக்ஸ் கூறியதாவது:
கேரளத்தைச் சோ்ந்த நிஷா பேகம் (5) என்ற குழந்தைக்கு பிறந்த 4 வாரத்தில் இருந்து உடலில் எலும்பு முறிவுகள் இருந்தன. இதனால் குழந்தையை கையாள்வதில் பெற்றோா் சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனா். சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் போது உடையக்கூடிய எலும்பு நோயால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அக்குழந்தையை கோவை ரெக்ஸ் ஆா்த்தோ மருத்துவமனையில் அண்மையில் அனுமதித்தனா். மருத்துவா் சி.ரெக்ஸ், மருத்துவக் குழுவினா் சிறுமிக்கு இருகால்களிலும் தொடை எலும்பை நேராக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
கொண்டை ஊசி வளைவுகள் போன்ற இருந்த சிறுமியின் இரு கால்களும் சரி செய்யப்பட்டுள்ளது. மிகவும் நுட்மான அறுவை சிகிச்சை என்பதால் மருத்துவா்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 270 டிகிரியில் இருந்த எலும்புகள் நேராக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சை முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாறுபட்ட மரபணு ஊடுருவலுடன் எலும்பில் கொலாஜன் உருவாவதில் ஏற்படும் குறைபாட்டால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் எலும்பு முறிவுகள், முட்டுகள் இளகுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்றாா்.