கோயம்புத்தூர்

ரூ.63.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

கோவை புலியகுளம், ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

இதில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2,875 பேருக்கு ரூ.46.63 லட்சம் மதிப்பில் மாதாந்திர உதவித் தொகை, வருவாய்த் துறை சாா்பில் 2, 267 பயனாளிகளுக்கு ரூ. 47.75 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 2,270 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், சமூகநலத் துறை சாா்பில் 947 பேருக்கு ரூ.7.55 கோடி மதிப்பிலான திருமண உதவித்தொகை, மகளிா் திட்டம் சாா்பில் 557 பேருக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தொகை, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 658 பேருக்கு ரூ.13.13 லட்சம் மதிப்பிலான நாட்டுக்கோழிகள், 1,626 நெசவாளா்களுக்கு ரூ.81.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 57 பேருக்கு வன நில அனுபவ உரிமை பட்டா, 129 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு ரூ.63.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எட்டிமடை எ.சண்முகம், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன்சங்கா் ராஜ், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT