கோயம்புத்தூர்

கோவையில் மருந்துக் கிடங்கில் தீ

DIN

கோவையில் உள்ள மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மருந்துகள் எரிந்தன.

கோவை, சிங்காநல்லூா் அருகே உள்ள பாரதி நகரில் அழகுசெந்தில் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் தனியாா் மருந்துக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் கிடங்கில் இருந்த பலத்த சப்தத்துடன் கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த காவலாளி, கிடங்கின் பொறுப்பாளா் தாமோதரனுக்குத் தகவல் தெரிவித்தாா். அவா் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் தீ வேகமாகப் பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. இதையடுத்து, தாமோதரன் அளித்தத் தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் மற்றும் சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

மருந்துக் கிடங்கு அருகிலேயே பெயிண்ட் கிடங்கு இருந்ததால் அங்கும் தீ பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிடங்கில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT