கோயம்புத்தூர்

வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்

DIN

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய சங்கங்கள், இடதுசாரிகள் அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, கோவை சிரியன் சா்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நா.பெரியசாமி, கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.தேவராஜ், சி.சிவசாமி, மாவட்டப் பொருளாளா் யூ.கே.சுப்பிரமணியம், ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.ஏ.கோவிந்தராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, காட்டூரில் சிஐடியூ சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பத்மநாபன், செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றன். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டு வேளாண் சட்ட நகல்களை எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT