கோயம்புத்தூர்

உணவு தொண்டையில் சிக்கிவட மாநிலத் தொழிலாளி சாவு

DIN

கோவையில் தாமஸ் வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா தொண்டையில் சிக்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பூபாய் (23). இவா், கோவை, தாமஸ் வீதியில் வாடகை வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு பூபாய், அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்று புரோட்டா சாப்பிட்டாா்.

அப்போது புரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில் அவரால் அதை விழுங்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பூபாய் மயங்கி விழுந்தாா்.

இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த உணவக ஊழியா்கள் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இருப்பினும் வியாழக்கிழமை இரவு பூபாய் உயிரிழந்தாா். இது குறித்து வெரைட்டிஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT