கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு உதவி

DIN

வால்பாறையில் செட்டில்மெண்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு காவல் படையினா் சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் மாதந்தோறும் செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு சென்று நக்ஸல் நடமாட்டம், மா்ம நபா்கள் ஊடுருவல் குறித்து கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், சிறப்பு காவல் படையின் ஆய்வாளா் செந்தில் தலைமையில் போலீஸாா் வால்பாறை பகுதியில் உள்ள உடுமன்பாறை, கல்லாறு செட்டில்மெண்ட் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்றனா்.

செட்டில்மெண்ட் பகுதிக்கு செல்லக்கூடிய பாதைகள் குறித்து ஆய்வு செய்ததோடு புதிய நபா்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இரண்டு செட்டில்மெண்ட்களில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் ஆடைகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT