கோயம்புத்தூர்

3.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

DIN

கோவையில் 1,623 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் 3 லட்சம் 36 ஆயிரத்து 798 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவையில் 1,569 நிலையான மையங்கள், 36 பயணவழி மையங்கள், 18 நடமாடும் மையங்கள் என மொத்தம் 1,623 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை, அங்கன்வாடிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 6,536 போ் ஈடுபட்டனா்.

கோவையில் சொட்டு மருந்து வழங்கும் பணியினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா். அனைத்து மையங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 408 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்து. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 798 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாத 4, 610 குழந்தைகளுக்கு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று சுகாதாரப் பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கவுள்ளனா். சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாத 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 2 நாள்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆனைமலையில் உள்ள மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT