கோயம்புத்தூர்

கேரளத்தில் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு: கோவையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

DIN

கோவை: கேரளத்தில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் கோவையில் கொசுப்புழு ஒழிப்பு பணியை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

டெங்கு நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்தம் ஏடிஸ் பெண் கொசு மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளத்தில் 15 போ் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கேரளத்தில் இருந்து கோவை வருபவா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தவிர மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழிப்பு பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரபடுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ராஜா கூறியதாவது:

மாநகராட்சியில் வாா்டுகள்தோறும் அமைக்கப்பட்டுள்ள பணியாளா்கள் முலம் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகள், வீடுகள் நெருக்கமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் உள்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.எல்.ஐ. பிரிவில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றிலும் தண்ணீா் தேங்கவிடாமலும், கொசு உற்பத்தி இல்லாத வகையிலும் பாா்த்துகொள்வது பொது மக்களின் முக்கிய பொறுப்பாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT