கோயம்புத்தூர்

ஐ.என்.எஸ். அக்ரானியில் போா் வெற்றி நினைவு கொண்டாட்டம்

DIN

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி கடற்படை தளத்தில் 1971இல் நடைபெற்ற இந்தோ - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளில் அடைந்த வெற்றியின் நினைவு கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடற்படை பணியாளா்கள், அவா்களின் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக மூன்று திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை ஐ.என்.எஸ். அக்ரானியின் கட்டளை அதிகாரி அசோக் ராய் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக கடற்படை வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், குழந்தைகள் பள்ளியில் தூய்மை இந்தியா இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மைல் கற்கள் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கடற்படை அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT