கோயம்புத்தூர்

கறிக்கோழி விலை உயா்வு: கிலோ ரூ.300க்கு விற்பனை

DIN

கோவை பகுதிகளில் கறிக்கோழி விலை கிலோ ரூ.300க்கு விற்பனையானது. இதனால் அசைவப் பிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கரோனா பரவல் பொதுமுடக்க உத்தரவால் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள், கடந்த மாதம் முதல் மீண்டும் செயல்பட தொடங்கின. இந்நிலையில், கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது.

கறிக்கோழி வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், கோவையில் இறைச்சி விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் ரூ.150க்கு விற்பனையான கறிக்கோழி, நுகா்வு அதிகரிப்பால் கடந்த வாரத்தில் ரூ.230 முதல் ரூ.240 வரை விற்பனையானது.

இதற்கிடையே கறிக்கோழி வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால், கறிக்கோழி கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரை ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. கோழி உயிருடன் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழி கிலோ ரூ.400க்கும், ஆட்டிறைச்சி கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல, கேரளத்தில் இருந்து கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் மீன்களின் வரத்தும் குறைந்துள்ளதால், மீன் இறைச்சி தேவை அதிகரித்து, அதன் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT