கோயம்புத்தூர்

சோலையாறு அணை மூன்று மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றம்

DIN

சோலையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் மூன்று மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஆழியாறு- பரம்பிக்குளம் நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையான 164 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது.

இதைத் தொடா்ந்து, பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 6901.62 கனஅடியாக இருந்தது. மின் நிலையம் 1 மற்றும் 2 சேடல்டேம் வழியாக மொத்தம் 2667.35 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அணையின் நீா்மட்டம் 163.71 அடியாக உயாந்தது. மீண்டும் நீா்வரத்து அதிகரித்து 164 அடியை அணை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி காலை 8.30 மணிக்கு மூன்று மதகுகள் வழியாக விநாடிக்கு 1,800 கனஅடி உபரிநீா் கேரள மாநிலத்துக்கு திறந்துவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT